முனைப்பு ஸ்ரீலங்கா ஊடாக நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுப்பு


கொரோணா மூன்றாவது அலை நாட்டை அச்சுறுத்தும் நிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தடை காரணவாகவும் நாடு முடக்கப்பட்டதன் காரணமாகவும் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணியினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது. 

முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் உலருணவு நிவாரணப்பணியானது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நேற்று பட்டிப்பளை,மண்முனை வடக்கு,களுவாஞ்சிகுடி,செங்கலடி மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. 

இன்று செங்கலடி,வாழைச்சேனை, வாகரை பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. 

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயானந்தரவி,நிருவாக சபை உறுப்பினர்களான சி.ஜீவிதன்,ப.விஜயகுமாரி,பே.சிவரஞ்சினி,த,பிரபாகரன், க.விவேகானந்தராசா, ச.சிவசுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.