மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே முதலாம் கட்ட தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் கட்டமாக தடுப்பூசியைப்பெற்றுக்கொண்ட அரச உத்தியோகத்தர்கள்,சுகாதார துறையினர்,பாதுகாப்பு பிரிவினர்,60வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எஸ்.அனட்ஜோதிலக்ஸ்மி தலைமையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இங்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்காக பெருமளவானோர் ஆர்வத்துடன் வருகைதந்ததை காணமுடிந்தது.