(சிந்து)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கல்வி அமைச்சு,சுகாதார அமைச்சும் இணைந்து இந்த கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று கல்வி கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை முதல் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பெருமளவான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகைதந்து தமது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதை காணமுடிகின்றது.
இன்றைய தினம் 874ஆசிரியர்கள் தடுப்பூசிகளைப்பெற்றுள்ளதாகவும் மேலதிக தடுப்பூசிகள் கிடைக்குமிடத்து தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.இராஜேந்திரா தெரிவித்தார்.