சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் நிகழ்வு


(சிந்து)

சர்வதேச சுற்றாடல் தினம் நேற்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வும் சஞ்சிகைவெளியீடும் நேற்று நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதும் மியோவாக்கி காடு வளர்ப்பு சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதுமான சஞ்சிகை வெளியிட்டுவைக்கப்பட்டது. 

மியோவாக்கி காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொண்டு வரும் பசுமை கழகங்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்க்கப்பட்டன.

இந்த நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பசுமைப்புரட்சி கழகங்களின் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது சஞ்சிகையும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இதேபோன்று சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந்; நிகழ்வின் பிரதான நிகழ்வானது களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் கலந்து கொண்டார். 

இதன்போது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரங்கள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.