மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 12 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் கொரனா தொற்று காரணமாக வயோதிப பெண்னொருவரும் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு,பயணியர் வீதியில் உள்ள வீடொன்றில் 84வயதுடைய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.இவரின் உடலம் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளைப்பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதுவரையில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான கொக்குவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்,எழுந்தமானமாக,பயணத்தடைகளை மீறியவர்கள் என 117பேர் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 12பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கொரனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 36வயதுடைய ஏழு மாத கர்ப்பிணிப்பெண்ணும் அடங்குதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாகடர் நா.மயூரன் தெரிவித்தார்.