நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல பகுதிகளில் விபத்துகள் தொடர்பான தகவல்களும் பதிவாகியே வருகின்றது.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் இன்று பகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் முள்ளாமுனை எனும் இடத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தியாகராசா சுரேஸ்கரன் என்பவரே இந்த விபத்தில் பலியானவராவார்
விபத்த்தின் போது படுகாயமடைந்த நபர் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும் வைத்தியசாலைக்கு செல்கையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொழில் நிமிர்த்தம் கொழும்பிற்கு சென்று நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார், இவர் ஆயித்தியமலையிலுள்ள தனது விட்டிலிருந்து வவுணதீவு சுகாதார அலுவலகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்கையில் முள்ளாமுனை எனும் இடத்தில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கலடி வைத்தியசாலையிலிருந்த சடலம் பரிசோதனைக்காக மட்டக்களப்பு பிரேத போதனா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடாபான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
