மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கறுப்பங்கேணியில் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம்,கூழாவடி,கறுவப்பங்கேணி,கொக்குவில் பகுதி மக்களுக்கு இங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் 164பேர் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 18பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மாமாங்கத்தினை சேர்ந்த 10பேரும் கறுவப்பங்கேணியை சேர்ந்த 04பேரும் கூழாவடியை சேர்ந்த 03பேரும் கொக்குவில் பகுதியை சேர்ந்த ஒருவருமாக 18பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேநேரம் அதிகளவான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள மாமாங்கம் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கொவிட் செயலணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




