மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பயணக்கட்டுபாட்டினை மீறும் வகையில் சிலர் செயற்பட்டுவருகின்றனர்.
இவர்களை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது தேவையற்ற வகையில் மட்டக்களப்பு நருக்குள் பயணத்தடையினையும் மீறி வருகைதந்தோர் திருப்பியனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது அத்தியாவசிய தேவைக்காக சென்றவர்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.