பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் செயற்பாடு –மட்டக்களப்பில் படையினர் களத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையிலும் பயணத்தடைகளை மீறிய வகையில் பொதுமக்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

இதனை கட்டுப்படுத்தி கொரனா தொற்றினை குறைக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இன்று காலை விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இன்று காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பயணத்தடையினை மீறும் வகையில் பயணங்களை மேற்கொண்டவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பிவைக்கப்பட்டனர்.

அத்தியாவசிய சேவைக்கு செல்வோர் அனுமதிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் ஓய்வூதியம் பெறவந்தவர்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.