(ரஞ்சன்)
பொதுமக்கள் தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கம் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.14000பீசிர் செய்து அதில் 2000தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 39பேர் மரணகக்கும் நிலையில் நாட்டை திறந்துவிட்டு இலங்கையில் வாழும் மக்கள் தொடர்பில் அக்கரையீனமாக செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் வழிகாட்டளில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
போரதிவுப்பற்று பிரதேசசெயலக மண்டப்பத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வில் பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி இளைஞர்கழக உத்தியோகஸ்தர்,இளைஞர்கழக உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்
இந்த இரத்ததான முகாமை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்
அதனை தொடர்ந்து பெருமளவான இளைஞர்கள் இரத்தம் வழங்கிவருகின்றனர்.
இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஊடாகஇலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளரும் போரதீவுப்பற்று முன்னாள் பிரதேசசபை தவிசாளருமான வீ.ஆர்.மகேந்திரனின் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கடந்த சில தினங்களாக இலங்கையில் பீசிஆர் எடுக்கும் வீதத்தினை அரசாங்கம் குறைத்து;ளபோதிலும் தொற்றாளர்களின் தொகையும் இறப்பும் அதிகமாகவே இருந்துவருவருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதுpப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இன்று இரத்தப்பற்றாக்குறை மட்டக்களப்பு மாவட்டம் அன்றி முழு இலங்கையிலும் காணப்படுகின்றது.இரத்தம் வழங்குவதனால் உடம்புக்கு ஒத்துவராது என சிலர் தவறான புரிதல்களுடன் உள்ளதாகவும் அவ்வாறு இல்லை.
அரசாங்கம் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.14000பீசிர் செய்து அதில் 2000தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 39பேர் மரணகக்கும் நிலையில் நாட்டை திறந்துவிட்டு இலங்கையில் வாழும் மக்கள் தொடர்பில் அக்கரையீனமாக செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.











