ஆனால் சிலர் நாட்டின் சட்ட திட்டங்களையும் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதானது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமைகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் புறநகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலர் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.