மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று (09) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று அவசரக் கூட்டம் இடம்பெற்ற போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த அதிகாரி பிரிவில் கடந்த சனிக்கிழமை 133 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று மாலை கிடைக்கப்பட்டதன் பிரகாரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மேற்படி மூன்று கிராமங்களிலும் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், நேற்றிரவு கொரோனா தொற்றால் மரணம் ஒன்றும் பதிவாகியது.
இதன் பிரகாரம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.