மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவம் கொரனா தொற்றினை எதிர்கொள்வதற்கு மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்கு தேசிய கொரனா செயலணி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் பல்வேறு உதவிகள் பொது அமைப்புகளினால் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி விடுத்தவேண்டுகோளின்; அடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பீசிஆர் இயந்திரம் உட்பட சுமார் 11மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கொரான செயலணியின் தலைவர் மேஜர் ஜெனரல் கொஸ்வத்த,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் என்.விஜயசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மலேசிய நாட்டில் உள்ள தன்னார்வ அலாஹா பவுண்சேன் என்னும் அமைப்பிடம் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த 11மில்லியன் ரூபா பெறுதியான பீசிஆர் இயந்திரம் மற்றும் அதற்குரிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரனா சிகிச்சை பிரிவுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் கட்டில்கள் மற்றும் மெத்தைகள்,விரிப்புகள் வழங்கப்பட்டு அதற்கான ஆவனங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம்; தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள் மற்றும் உறுப்பினர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி க.கலாரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.