மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் கொரனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 09பேர் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
கல்லடியின் பல பகுதிகளில் இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதேநேரம் கல்லடி பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலை அதிகளவில் காணப்படுவதாகும் இதன்காரணமாக தொற்று அதிகரிக்கும் நிலையும் உள்ளதாகவும் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் அதேவேளை மக்கள் வெளியில் செல்லுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.