மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கொழும்பு இருந்து வந்த அறிக்கையின் படி ஏறாவூர் TIDயினரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு கைது செய்யபப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த அறிக்கையின் படி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து TIDயினரால் கைது செய்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளர்.
விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் , இளைஞர்களை சேர்த்து அரசுக்கு எதிரான அமைப்புக்கள் உருவாக்குதல், விடுதலைப் புலிகள் தொடர்பில் முகப்புத்தக பதிவு, போலி முகப்புத்தகம் போன்ற பல குற்றச்சாட்டுக்களை வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை முதல் பல மணிநேர விசாரணையை TID யினர் மோகனிடம் மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை இவர் மற்றும் இவரது குடும்பம் மற்றும் தமிழ் உணர்வாளர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் விபரம் , அவர்கள் குடும்ப விபரம் போன்ற விடயங்களும் திரட்டப்பட்டுள்ளதுடன், இவர்கள் பயன்படுத்திய ஸ்மார்ட் தொலைபேசி, டஃப், மடிக்கணணி என்பனவும் TID யினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர் அமைப்பின் செயலாளர் மோகன்தாஸ் சறுஜன் பற்றியும் முழுமையான தகவல் மோகனிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் பற்றியும் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தல் போன்ற போலி முகப்புத்தங்க கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதுடன். அமைப்பின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பயன்படுத்திய "செங்கலடி சிங்கம் , புயல் வீரன் பேன்ற தமிழ் உணர்வாவளர் அமைப்பின் பல போலி முகப்புத்தகங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இப்ப போலி முகப்புத்தகங்களை இயக்கினர் என் சந்தேகத்தின் பெயரில் அமைப்பின் செயலாளர் மற்றும் சிலரிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே வேளை அமைப்பின் செயலாளர் சறுஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறய்யட்டுள்ளதுடன் நாளை அல்லது நாளை மறுதினம் க.மோகன் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.