முனைக்காட்டில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை –பெருமளவாக கோடாவும் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பாரியளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையாளர்களை தேடி பொலிஸார் விசேட சோதனைகளையும் முற்றுகைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையகத்தின் பொறுப்பதிகாரி என்.ஏ.குணவர்த்தனவின் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் அமரசிறி,சப் இன்ஸ்பெக்டர் சந்திரசிறி,பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயந்த,தனுஸ்க,விஜயசிங்க,ரமேஸ்,சந்திகுமார் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த 12பரல் கோடாக்கள் மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திசெய்யும் பொருட்களும் மீட்கப்பட்டன.12பரல்களிலும் 24000லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முற்றுகையின்போது குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தர்.