பார் வீதியில் விபத்து –படுகாயமடைந்த சிறுவன்


மட்டக்களப்பு நகரில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பார் வீதியில் இன்று வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் மீது மோதியுள்ளது.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் திடீர் என சிலர் வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச்செல்வதனால் இவ்வாறு விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.