மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் அஞ்சலி நினைவு மட்டுநகர் தந்தைசெல்வா சிலை வளாகத்தில் அஞ்சலி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைத் தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இ.பிரசன்னா, மா.நடராசா,மட்டுநகர் முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு கத்தோலிக்க மத குருக்கள், மட்டுமாநகர சபை உறுப்பினர்களும் உயிர் நீத்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.