புனித மரியாள் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு பூஜை


ஜேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற உயிர்த்த ஞாயிறு இன்றாகும்.உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுல் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.