விரிவுரையாளர் இன்பமோகன் பேராசிரியரானார்


இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி வ.இன்பமோகன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவர் மட்டக்களப்பு குருக்கள் மடம் கிராமத்தில் வடிவேல் பாக்கியம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். குருக்கள் மடம் கிராமத்தில் அமைந்துள்ள கலைவாணி மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை பெற்றார்;.

இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீடத்தின் முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தனது முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் மறைந்த மெய்யியல் பேராசிரியரான சோ.கிருஷ்ணராஜா அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ்பூர்த்தி செய்திருந்தார்.

பேராசிரியர் வ.இன்பமோகன் அவர்கள் ஈழத்தக் கூத்து மரபு, கிழக்கிலங்கைச் சடங்குகள், இலங்கை வேடுவர் சமூகம், இந்தியக் கலைகள், சினிமா, தமிழ் நாட்டாரியல் என்பவற்றை பிரதான அய்வுத் துறையாகக் கொண்டு பல ஆய்வு நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடடுள்ளார்.