மட்டக்களப்பு மாநகரசபையில் அமரர் ஊர்திக்கு நடந்த அநீயாயம் -ஜனா கண்டனம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தயாபரனின் அடாவடித்தனங்களினால் மக்கள் பாதிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜிகே அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தியின் பாதுகாப்பு கருதி மாநகர சபையின் வாகனத் தரிப்பிடத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக மாநகர சபையின் 38 உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் ஊர்தியை நிறுத்தி வைத்தோம். 

மட்டக்களப்ப மாநகரசபையின் ஆணையாளராக தயாபரன் சில மாதங்களிற்கு முன்பு வந்ததின் பிற்பாடு ஊர்தியை தரிப்பிடத்தில் நிற்பாட்டுவதற்கு தடை விதித்தார். 

ஆணையாளருக்கும் முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடைப்பட்ட அதிகாரப் போட்டியில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் இலவச ஊர்தி வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது. 

ஆனால் இன்று ஆணையாளர் தயாபரனின் அடாவடி அப்பாவி மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் வாகனத்தினை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டு வாகனத்தினை நகர்த்தமுடியாமல் செய்துள்ளதுடன் வாகனத்தில் அமரர் ஊர்தி சேவையென்று எழுதப்பட்டவையும் வெள்ளை பெயிடினால் அழிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு ஏழை இறந்து அந்த பூதவுடல் இந்த அமரர் ஊர்தியில் ஏற்ற வேண்டுமாக இருந்தால் எப்படி இந்த வாகனத்தை வெளியில் எடுப்பது என்பது பற்றி சிந்தக்க வேண்டும். 

இந்த ஆணையாளர் மக்களை நேசிக்கின்றாரா அல்லது சிந்திக்கும் இடத்தில் இவருக்கு கோளாறா என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.