நகரை ஒளியூட்டும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீதி மின் விளக்குகளுக்கான ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வானது நேற்று (19) மாலை இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாக நகரை ஒளியூட்டும் செயற்றிட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில், அக்சஸ் எஞ்சினியரிங் தனியார் நிறுவனத்தினால் நவீன தொழிநுட்பத்துடன் தானியங்கி முறையிலான இயங்கு நிலையுடன் கூடிய வீதி விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பழைய கல்முனை வீதியின் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை உத்தியோகபூர்வமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் திருமதி கலைவாணி வண்ணியசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் அவர்களிடம் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக வீதி மின் விளக்குகளை ஒளிரச் செய்யும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்களான முகமட் நிப்லார், திருமதி வர்ணேஸ்வரி ரவிச்சந்தரன், வடிவேல் குபேரன், மாநகர சபையின் வேலை மேற்பார்வையாளர்கள்மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப அலுவலகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.