திருச்செந்தூர் சுவாமி ஓம்காரானந்தா முன்பள்ளி மாணவர்களின் பொங்கல் விழா


தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கல்வி நிலையங்கள்,திணைக்களங்கள்,வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு திருச்செந்தூர் சுவாமி ஓம்காரானந்தா முன்பள்ளி மாணவர்களின் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்களினால் பாடசாலைக்கு முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எதிர்கால சந்ததிக்கு தைப்பொங்கலின் முக்கியத்துவத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது முன்பள்ளி மாணர்வர்களுக்கு பொங்கலின் சிறப்புகள் மற்றும் அதனை அனுஸ்டிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் சொற்பொழிவுகளும் வழங்கப்பட்டன.