மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் மாணவர் கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் வளாகத்தில் இந்த நிகழ்வில் மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகர்,சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாசின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே பாடசாலையில் பல்வேறு தரத்திலும் கராத்தே பயிற்சிகளை பூர்த்திசெய்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.