மட்டக்களப்பில் இன்று அதிகாலை ரயில் மோதுண்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு,கூழாவடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கறுவப்பங்கேணியை சேர்ந்த 23வயதுடைய ச.தனுஜன் என்னும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வந்த ரயில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.