மட்டு மாநகர சபை முதல்வர் சரவணபவனிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

 


(லக்‌ஷன்)

மட்டக்களப்பு - மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரினால் விசாரணை நேற்றைய தினம் (19)  அவரது மாநகர சபை அலுவலகத்தில் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரை கலந்து கொண்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தெரிவிக்கையில்

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (#P2P) வரையிலான பேரணியில் நானும் ஒருவனாக ஜனநாயகத்தின் அடிப்படையில் பங்குபற்றியிருந்தேன்.

குறித்த பேரணியில் தற்கால சுகாதார நெறிமுறைகளைப் பேணி ஜனநாயகத்திற்கு முரணில்லாதவகையில் கலந்துகொண்டோம். இருப்பினும் பொலிசாரால் பல தடையுத்தரவுகள் பிரதேசத்திற்கு பிரதேசம் பிறப்பிககப்பட்ட வண்ணம் இருந்தன.


அதன் விசாரணயினை பொலிசார் இன்று எனது அலுவலகத்தில் என்னுடன் நடத்தியிருந்தனர். அவர்களது கேள்விகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் என்னால் பதில்கள் வழங்கினேன் தாகவும் தெரிவித்தார்.