இதன்போது தவிசாளரினால் 35வது சபை அமர்வுக்கான கூட்டறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதனை சபை உறுப்பினர் கி.இராமகிஷ்ணன் முன்மொழிய சபை உறுப்பினர் செ.மகாதேவன் வழிமொழிய சபை உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொன்டனர்.
2020 ஆண்டு தூம்பங்கேனி 50 வீட்டுத்திட்ட மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கும் மண்டூர் கிராமத்தில் கடைத்தொகுதி அமைப்பதற்கும் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே மாகாண சபை அமைச்சினால் பின்னடைவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கு முகமாக தும்பங்கேணி ஐம்பது வீட்டு திட்டம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக1.5 மில்லியனும் மண்டூர் கிராமத்தில் கடைத் தொகுதிகள் அமைப்பதற்காக 8.5 மில்லியனும் உள்ளுராட்சி மன்றங்களின் வலுவூட்டல் வேலைக்காக பாலையாடிவட்டை கடைத் தொகுதிகள் அமைப்பதற்காக 2 மில்லியனும் 2021 ஆண்டுக்கான வேலை செய்யும் முகமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை சபை வழங்கவேண்டும் எனவும் இங்கு தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது. இதனை அனைத்து சபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
போரதீவுப்பற்று பிரதேச சபையைக்குட்பட்ட 10 வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 450 மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகள் வடிகான்கள் புனரமைப்பிற்காக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு எசபைக்கு குறைவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2021 ஆண்டு நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிதிகள் வழங்கப்படும் எனவும்; போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதிகள் அனைத்தும் கொங்கிறிட் பாதை அமைக்க முடியும் எனவும் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளரினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச சபையில் உட்பட்ட கிராமங்களில் வீதிகள் அமைக்கப்படுகின்றது.பிரதேச சபைக்குட்பட்ட வீதிகள் அனைத்துக்கும் பெயர்பலகைகள் இல்லாமல் இருக்கின்றது. அனைத்து வீதிக்கும் பெயர் பலகை அமைக்கப்பட வேன்டும் என சபை உறுப்பினர் சு. விக்னேஸ்வரன் முன்வைத்தார். அதனை தவிசாளர் உட்பட அனைத்து சபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான ஒன்றுகூடல் நடைபெற்று கிராமங்கள் பிரிக்கப்பட்டு இன்று பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் இக்கூட்டம் தொடர்பில் பிரதேசபைக்கோ பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித அழைப்பும் வழங்கப்படவில்லையென இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் தெரியப்படுத்தப்படாமல் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இன்றைய அமர்வின்போது சபை அமர்வின்போது கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.




