மட்டக்களப்பு மாநருக்குள் நாளை வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை மூடுவதற்கான கோரிக்கையினை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கொரிக்கை விடுத்தார்.
புதுவருடத்தினை அமைதியான முறையிலும் வீடுகளில் இருந்து ஏற்பாடுகளை செய்து அமைதியாக கொண்டாடுமாறும் நகர்ப்பகுதிக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.