2021 புதிய வருடத்தில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான கூட்டமானது இன்று (09/01/2021 ) சனிக்கிழமை மட்/ தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் சமூக இடைவெளியுடன் , சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாடசாலையின் அதிபர் திரு சா.மதிசுதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2021.01.11ம் திகதியில் பாடசாலை ஆரம்பிப்பதற்கும், கொவிட் 19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்க்குமான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் பின்பற்றிக் கொண்டு மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர் தெளிவு படுத்தினார்.
இக் கூட்டத்தில் கிராம சேவக உத்தியோகஸ்த்தர்,பொதுச்சுகாதார பரிசோதகர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்.நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.