கை கொடுக்கும் கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழந்தவர்கள் மிகவும் கஸ்டமான நிலையில் இருப்பதன் காரணமாக பொது அமைப்புகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.

இதனடிப்படையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 

35ம்  கிராமத்தை சேர்ந்த கை கொடுக்கும் கரங்கள் அமைப்பினால்  கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது.

வெளி நாடுகளில்   வாழும்  இளைஞர்களின் நிதியுதவியுடன் கை கொடுக்கும் கரங்கள் அமைப்பினால் எல்லை கிராமத்தில் வாழும் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் உள்ள 200 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  

கை கொடுக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் தலைமையில் இன்று  35 கிராமம் கண்ணபுரத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் 1ம் வகுப்பில் இருந்து 11 ம் வகுப்பு வரைக்கும் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.