(வீடியோ)மட்டக்களப்பில் பொலிசாரை கடுமையாக எச்சரித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் !

 


மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு பிரதேசமக்கள் 08.01.2021   ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டடானது மட்டக்களப்பு ரிதிதென்ன பிரதான வீதியோரச் சந்தியில் இடம்பெற்றது. வாகரைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட ஓமடயாமடு மக்கள் தங்களது கிராமத்திற்கான வீதியானது போக்குவரத்திற்கு உகந்தது இல்லாமல் காணப்படுவதாகவும் மணல் ஏற்றும் வாகணங்களில் அதிக பயணத்தினால் வீதி சேதமடைந்துள்ளதாகவும் குறித்த மணல் அகழ்வை நிறுத்தக்கோரியும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்பாட்ட இடத்திற்கு வருகைதந்த ஓமடியாமடு விகாராதிபதி கடவத்மடுவே சுபேதாலங்கார(சுதுபன்சால - ஓமடியாமது) ஆர்ப்பட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடார் இதன்போது ஆர்ப்பட்டக்காரர்களுக்கும் தேரருக்கும் இடையில்  முறுகல்நிலை ஏற்பட்டது. பொலிசார் தேரரை அவ்விடத்தில் இருந்து அகற்றிச் சென்றனர்.

பின் ஆர்பாட்டக்காரர்களை பொலிசார் மற்றும் இரானுவத்தினர் கூட்டம் கூடவேண்டாம் எனவும் கலைந்துசெல்லுமாறும் தெரிவித்தனர்.
 
இதேவேளை ஆர்பாட்டக்காரர்களின் விபரங்களை பொலிசார் திரட்டுவதை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
ஆர்பாட்ட இடத்திலிருந்து செல்லும் போது சிலர் பொலிசாரை நோக்கி எதிரான கருத்துக்களையும் தெரிவித்து சென்றனர்.

https://youtu.be/xjTDsWhH5uA