மயிலத்தமடு, மாதவனை விவகாரம் -நீதிமன்றம் செல்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு


மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

பரம்பாரை பரம்பரையாக இப்பகுதியில் கால்நடைகளை வைத்து வளர்த்தவர்களுடன் நாங்கள் கலந்துரையாடினோம்.இந்த மேய்ச்சல் தரையாக காணப்பட்ட இடங்களில் மற்றயை மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுவருவதையும் பார்வையிட்டோம்.மாடுகளுக்கு மேய்ச்சல்தரையில்லாத சூழ்நிலையேற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ஒரு மாதத்திற்கு முன்னர் இப்பகுதிக்கு வந்து சில பகுதிகளை பயிர்ச்செய்கைக்கு வழங்குகங்கள் என்று கூறிச்சென்றுள்ளார்.மாடுகளுக்கு மேய்ச்சல் தரையாக இருக்கவேண்டிய பகுதி ஒரு சமநிலையாக இருக்கவேண்டும்.அது இந்த பிரதேசத்தில்தான் இருக்கின்றது.இப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களை இப்பகுதிக்கு வந்தவர்கள் மலைப்பகுதிகளுக்கு செல்லுமாறு விரட்டுவதாக தெரிவித்தனர்.அப்பகுதிகளில் மாடுகளை மேய்க்கமுடியாது.

இப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கம் அதிமாக மாடுகள் நிரந்தரமாக மேய்க்கப்படுகின்றன.அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளின்போது மேலதிகமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாடுகள் இப்பகுதிக்கு கொண்டுவரப்படுகின்றது.

ஆகையினால் இந்த பண்ணையாளர்கள் நாட்டுக்கு பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை செலுத்திவருகின்றனர்.இங்கு பெறப்படுகின்ற பால் அரச நிறுவனங்களினால் கொள்வனவுசெய்யப்படுகின்றது. இவையெல்லாவற்றையும் அழிக்கின்ற வகையில் அரசாங்கத்தினால் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 

இது மகாவலிக்கு சொந்தமான நிலம்.சில பகுதிகள் வனப்பாதுகாப்பு நிலமாக சொல்லப்படுகின்றது.மகாவலி தண்ணீர் வராவிட்டாலும் தி;ட்டமிட்ட குடியேற்றங்களை அரசுகள் முன்னெடுத்துவருகின்றன.அந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்தான் இங்கு சோளப்பயிர்ச்செய்கைகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

பல தலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட இந்த பிரதேசத்தினை அரசாங்கம் அபகரித்து வேறு மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு இந்த இடத்தினை வழங்க நடவடிக்கையெடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சிகள் நடைபெற்றபோது மகாவலி அதிகாரசபை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இங்கிருந்து அகற்றியுள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கம் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்து அவர்களை தாங்களே அழைத்துவந்து அவர்களுக்கு நிலங்களை வழங்கி புதிய குடியேற்ற முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர்,பலதரப்பட்ட அரசியல் தரப்புகளுடனும் இது குறித்து பேசியிருக்கின்றோம்.எதுவும் கைகூடவில்லை.

அதன்காரணமாக இறுதியாக நீதிமன்றத்தினை நாடுவதற்கு இறுதியாக தீர்மானித்திருக்கின்றோம்.