மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக தயாபரன் நியமனம்


மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக எம்.தயாபரன் கிழக்கு மாகாண ஆளுனரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.தயாபரன் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர்,வெருகல் பிரதேச செயலாளர் என பல்வேறு பதவிகளில் இருந்துள்ள இவர் மட்டக்களப்பு குருக்கள்மடத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.