(ரஞ்சன்)
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் மூன்று கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலும் இன்று திகதி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய கிராமங்களை இனங்கண்டு வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வெல்லாவெளி பொதுச் சுகாதாரஅலுவலகத்துக்பட்ட பரிசோதகர்களான கு.குபேரன்,பி.ஜதுசன் பி.இராஜேஸ்வரன் எஸ்.ரவிகரன் .ரிசிகோபன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்களின் ஆகியோரின் வழிநடாத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ன.
கிராம உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம மட்ட டெங்கு குழுவினர் சமூக சுகாதார பயிற்சி உதவியாளர்கள் பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து பொது இடங்கள் பாடசாலை வீடுகள் போன்றவற்றை பரிசோதனை செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மற்றும் டெங்கு பரவக் கூடிய வகையில் இருக்கின்ற இடங்களை இனங்கண்டு மற்றும் டெங்குக் குடம்பி இருக்கின்ற உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டுள்ளது.












