(ரஞ்சன்)
மட்டக்களப்பு,போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பள்ளவட்டை கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள 27 வயதுடைய. 2 பிள்ளைகளின் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் கொரனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
கடந்த 12 -12 -2020 ஆம் திகதி விளாந்தோட்டம் பள்ளவட்டை கிராமத்திலிருந்து 3பேர் கொழும்புக்கு வேலைக்கு சென்றுள்ளனர். குறித்த நபர்கள் தொழிலுக்காக சென்ற நிறுவனத்தில் இவர் 13-12-2020 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது ஒருவர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தார்.
தற்பொழுது வெல்லாவெளி பொது சுகாதார வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கொரனா அடையாளங் காணப்பட்டவர்; மற்றும் அவருடன் தொடர்புபட்டவர்களின் குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று16-12-2020 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெல்லாவெளி பொது சுகாதாரவைத்திய அதிகாரி ள.ராஜேந்திரன் தெரிவித்தார்
அத்துடன் குறித்த நபரை அழைத்துச்சென்ற பாலையடி வட்டையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவருடைய குடும்பத்தாரையும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளிலும் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மாணவர்கள் திருப்பியனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.