இன்று மாலை வரையில் கிடைக்கப்பெற்ற பீசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12பேரும் ஆலையடிவேம்பில் 03பேரும் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரையில் 256பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையினை உணராமல் சிலர் செயற்படுவதாகவும் இதன் காரணமாக ஏனையவர்களும் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.