மட்டக்களப்பில் சர்வதேச மீனவர் தினம் அனுஸ்டிப்பு


சர்வதேச மீனவர் தினம் இன்றாகும்.உலகின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தினை வகிக்கும் மீனவர்களை கௌரவப்படுத்தும் வகையில் சர்வதேச மீனவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மீன்பிடி துறை காணப்படுகின்ற நிலையில் மீனவர்களை கௌரவப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சர்வதேச மீனவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவிலான பங்குபற்றுதலுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சூம் தொழில்நுட்பம் ஊடாக பல பாகங்களிலும் இருந்து தொடர்புகொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.