ஈழத்து திருச்செந்தூரில் கந்த சஸ்டி விரதம் நிறைவு


இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதமான கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று ஆலயங்களில் விசேட பூஜைகள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முருகப்பெருமானை வேண்டி ஆறு தினங்கள் இந்துக்கள் இந்த விரதத்தினை அனுஸ்டித்துவந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் கொரனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கந்த சஸ்டி விரத பூஜைகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று கும்பம் சொரிதலுடன் விரதம் நிறைவடைந்தது.

நேற்று சூரன் போர் நிகழ்வு கொரனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் முருகப்பெருமானுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஐந்து தினங்கள் வழிபடப்பட்ட கும்பம் ஆலய தீர்த்தக்கேணியில் சொரியப்பட்டு விரதம் நிறைவடைந்தது.