வறுமையில்லாத சூழலை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் -சந்திரகாந்தன் பா.உ


நாட்டினை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்திக்கொண்டு அரச கொள்கையினை அமுல்படுத்துவதே தனது நோக்;கம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது மாவட்ட அபிவிருத்திக்குழு காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிராமிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி மக்களின் வறுமையினையொழிப்பது அதேபோன்று வறுமையில்லாத சூழலை கட்டியெழுப்புவதற்கு அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய காலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவில்லையென்ற விமர்சனம் இருந்ததாகவும் எதிர்வரும் 13ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் ஊடக சந்திப்பினை சந்திரகாந்தன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.