அதிகஷ்ட பிரதேச மாணவி ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை


மட்டக்களப்பு கல்வி குடா கல்வி வலயத்திற்குட்பட்ட தொப்பிக்கல் பகுதியில் அதிகஷ்ட பிரதேசமான ஈரளக்குளம் கிராம பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியால மாணவி ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.

குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்த நிலையில் இவ்வருடம் 2020 இல் தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் முதல்தடவையாக 160  புள்ளிகள் பெற்று செல்வி.வி.நிறோ என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.

எந்த அடிப்படை வசதிகளும் அற்ற வறிய நிலையில் உள்ள குறித்த மாணவி இந்த சாதனையை படைத்துள்ளார்.

சாதனை படைத்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் வலயத்திற்கும் பெருமை பெற்றுத்தந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.