ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி –சாடுகிறார் கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்


ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி.வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார்.

அசாத்சாலி போன்றவர்கள் முஸ்லிம் மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் இன்றாகும்.

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று விசேட வழிபாடுகள் ஆலங்களில் நடைபெற்றன.

மட்டக்களப்பு முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை நடைபெற்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாடுகளில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தலைமையில் இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த வழிபாடுகளில் பிரதமர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும் நாட்டில் கொரனா அச்சுறுத்தல் நீங்கி சுபீட்சம் ஏற்படவும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பூஜை விழிபாடுகளை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பினையும் நடாத்திய அதில் கருத்து தெரிவிக்கையில், 

கடந்த நல்லாட்சி காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும்கூட அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. எமது அரசாங்கத்தில் பலமிக்கதொரு அரசியல்வாதியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமானுடைய முயற்சியின் காரணமாக இன்று அவருடைய புதல்வர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் மூலமாக அந்த மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்திருக்கின்றது. 

நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது விவசாயிகளுக்கு 1500ரூபா உரமானியம் வழங்குவதாக எமது பிரதமர் முன்மொழிந்திருக்கின்றார். 

அரச துறையில் வேலை வாய்ப்பை பெற்று வேலை செய்பவர்களுக்கு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலையை எமது பிரதமர் செய்திருக்கின்றார். 60வயதுவரை அரச துறையில் தொழிலை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை எமது ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் எங்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலமாக இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதில் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது நரித்தனத்தினால் கல்முனை பிரதேச செயலகத்தை இங்கிருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற ஆரிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய அதன் உறுப்பினர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையுமில்லை. ஆனால் பலவந்தமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவீர்களானால் உங்களுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம். கிழக்கு மண் தமிழ் மக்களுடைய மண்ணாகும். எங்களுடைய போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த இந்த மண்ணை முஸ்லிம்களை ஆளவிடமாட்டோம். 

முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென அசாத் சாலி கூறுகின்றார். இது முஸ்லிம் நாடல்ல. இது சிங்கள பௌத்த நாடாகும். இந்த நாட்டிற்குள்ளே இருப்பது ஒரே சட்டமாகும். அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமாகும். கொரொனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது இறந்த உடல்களிலிருந்து வெளிப்படும் நீரின்மூலம் கொரொனா நோய் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துமென சுகாதார பிரிவினர் கூறுகின்றனர். ஆனால் புத்தளத்திலோ மன்னாரிலோ அடக்கம் செய்யவேண்டும் என்கின்றனர். அப்படியானால் அங்கிருக்கின்ற மக்கள் வாழக்கூடாதா? அசாத்சாலி அவர்கள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரோடு இணைந்து செயற்பட்டவராவார். அவர் இரண்டு பக்கத்திற்கும் சார்பாக இருப்பவர். முஸ்லிம் மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடுபவர்களே இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாவர். இந்த நாட்டிலே முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு காரணமாக ஹிஸ்புல்லா,ரிஷாத்பதியுதீன்,அசாத்சாலி போன்றவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட வேண்டும். அது மாத்திரமல்ல எமது நாட்டிற்று செய்த துரோகத்திற்காக இவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ரிஷாத்பதியுதீன் வன்னியில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைத்தவர். அவர் முஸ்லிம் சமூகத்தினை புத்தளத்திலும் வில்பத்து காடுகளை அழித்து,இயற்கை வளங்களை அழித்து இந்த குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் கடந்த நான்கரை வருடங்களாக இந்த செயற்பாடுகளை ஊடகங்கள் மூடிமறைத்தன.

ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி.வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளார்.