மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்களை மூட உத்தரவு

நாட்டில் கொரோனா தாக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூகப்பரவலில் தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் (Restaurant) மற்றும் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.