ஏறாவூர் காட்டுமாஞ்சொலை பத்திரகாளியம்மன் புகழ்பாடும் ‘தாயே நீ வருவாய்’ இறுவெளியீட்டு விழா


எமது பாரம்பரியங்களையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லும் பணிகளை ஆலயங்கள் முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக கட்புல தொழில்நுட்ப கலைத்துறை தலைவர் கலாநிதி சிவரெத்தினம் தெரிவித்தார்.

ஏறாவூர் காட்டுமாஞ்சொலை பத்திரகாளியம்மன் புகழ்பாடும் தாயே நீ வருவாய் இறுவெளியீட்டு விழா

மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சொலை பத்திரகாளியம்மன் புகழ்பாடும் தாயே நீ வருவாய் இறுவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

வரலாற்றுசிறப்புமிக்கதும் இலங்கையின் மிகவும் பழமையானதுமான ஏறாவூர் காட்டுமாஞ்சோலை பத்திரகாளியின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் இந்த இறுவெட்டு பாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்வெளியீட்டு நிகழ்வு இன்று ஆலயத்தின் தலைவர் க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக விஸ்வப்பிரம்ம ஸ்ரீ கு.வாமதேவன் பூசகர் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக கட்புல தொழில்நுட்ப கலைத்துறை தலைவர் கலாநிதி சிவரெத்தினம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,சட்டத்தரணி சி.ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏறாவூரை சேர்ந்த சி.பவதாரகனின் முயற்சியினால் அவரால் பாடப்பட்டு சிறப்பான முறையில் இந்த இறுவெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுவெட்டில் உள்ள பாடல்களை ஊடகவியலாளர் மோகன் மயூரன் மற்றும் விஸ்வப்பிரம்மஸ்ரீ இ.வை.எஸ்.காந்தன் குருக்கள்,இசையமைப்பாளர் பவதாரகன்,கந்தசாமி ஜெகன்மோகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கலாநிதி சீவரெத்தினம்,

தமிழர்களின் ஆதி வழிபாடுகள் கொற்றவையும் வேலும் காணப்பட்டன.கொற்றவை என்பது காளி வழிபாடாக இருந்தன.இடையில் ஏற்பட்ட சமஸ்கிருத வழிபாடுகளே எமது வழிபாடுகளில் பாரிய மாற்றங்களை செய்து வேறு வழிபாடுகளை புகுர்த்தியது