உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டது –தனியார் வகுப்புகளும் நடாத்தமுடியாது –அரசாங்க அறிவிப்பு


கா.பொ.த.உயர் தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றினை பிற்போடுவதற்கு கல்வி தீர்மானித்துள்ளது.
கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தடைவிதிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேநேரம் குறித்த பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை உரிய அறிவிப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் தொடர்பான திகதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.