கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு வழிபாடு


146 சர்வதேச அஞ்சல் தினத்தினை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு தேசிய நிகழ்வுக்கு இணையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இன்று பகல் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

தபால் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் தபால் சேவைகள்,தொழில் அபிவிருத்தி,வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களினால் பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டது.இந்த வழிபாடுகளில் ஆலய நிர்வாகத்தினர்,தபால் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தபாலகத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அங்கு சர்வதேச அஞ்சல் தினத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தபாலகத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அஞ்சல் மா அதிபர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் ,மத்திய அஞ்சல் பரிவர்த்தன நிலைய அத்தியட்சகர் அஸ்லம் ஹசன்,கட்டுப்பட்டாளர் தம்மிக்க விமலசுரிய,சிரேஸ்ட நிர்வாக உத்தியோகத்தர் திருமதி வினோதினி கார்த்திகேயன்,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சலி அத்தியட்சகர் எஸ்.ஜெகன்,திருகோணமலை மாவட்ட அஞ்சலி அத்தியட்சகர் சி.அருள்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புழைப்புவாத அரசியலுக்காக தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் அரசியலை நாங்கள் ஒருபோதும் செய்யமுடியாது என தபால் சேவைகள்,தொழில் அபிவிருத்தி,வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டபோது தான் தமிழ் மக்களுக்கு எதிராக 42 போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.