மட்டக்களப்பில் மேலும் 16பேருக்கு கொரனா தொற்று உறுதி –மட்டக்களப்பில் 27 ஆக அதிகரிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16பேர் கொவிட் 19 தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்படும் 65பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பீசிஆர் பரிசோதனைகள் கட்டம்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் சோதனையில் 11பேர் இனங்காணப்பட்டதுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் சோதனை மூலம் 16பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

அனைவரையும் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அநாவசியமாக வெளியில் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.