கூழாவடி புனித அந்தோனியார் ஆலய பணிமனையானது திறந்து வைக்கப்பட்டது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கூழாவடி புனித அந்தோனியார் ஆலய பணிமனையானது  நேற்று (26) மாலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கல்வாரி திருவுருவமும், கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆலய பணிமனையும் அதி வணக்கத்துக்குரிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய வெளித்திட்டத்தின் கீழ் இவ் ஆலயத்துக்கு என நிதி ஒதுக்கீட்டினை செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா ஸ்ரீநேசன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பங்கு தந்தை க்ரைட்டன் அவுட்ஸ்கோன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கூழாவடி மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்கு மக்கள் அருட்சகோதரிகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.