இரா.சாணக்கியனுக்கு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அமோக வரவேற்பளிப்பு!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியனுக்குமக்கள் அமோக வரவேற்பளித்து வருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 33 ஆயிரத்து 332 விருப்புவாக்குகளை சுவீகரித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் முடிவுகள் வெளியான தினம் முதல் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.
குறிப்பாக களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், குருக்கள்மடம்,செட்டிபாளம், மாங்காடு,தேற்றாத்தீவு, களுதாவளை ,ஹிமாலியா கல்வி நிலையம், களுவாஞ்சிகுடி ,ஒந்தாச்சிமடம் ,எருவில் வடக்கு ,எருவில் செல்லப் பிள்ளையார் கோயில் , மகிழூர் கண்ணகிபுரம் மகிழூர்முனை,குருமன்வெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இரா.சாணக்கியனுக்குமக்கள் அமோக வரவேற்பளித்தனர்.