மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை பயிற்றுவிப்பாளர் நலன்புரி அமைப்பு உதயம்

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் வழங்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயத்திலும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு பாலமீன்மடு வெளிச்சவீடு விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி ஒரு வருட நிறைவினை சிறப்பித்தனர்.
இதன்போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்ட அவர்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
அத்துடன் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கேக்வெட்டப்பட்டு தங்களுக்குள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் நன்மை கருதி பாடசாலை பயிற்றுவிப்பாளர் நலன்புரி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டதுடன் அதற்கான தலைவராக விளையாட்டு உத்தியோகத்தர் பயாஸ் கிருஷாந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்பேது உப தலைவர் - தவசீலன்,செயலாளர்-சி.தீபா,உப செயலாளர்- ருஷாந்தன்,பொருளாளர் -நிராஸ்,இணைப்பாளர்- கௌசிகன்-மட்டக்களப்பு கோகுல்-பட்டிருப்பு மட்.மத்தி-சிப்லி கல்குடா -சுஜன் மட்.மே- மெகின்,ஒழுங்கமைப்பு குழு -குகன்,யசோதரன், நிர்மலராஜ், டினோ,ரிஷாந்தன்,  ஐடா, லக்சிகா, மதிராஜ்,சர்தீக், தர்மிக்கா,ஆலோசனை குழு- மட்டக்களப்பு- மதன்,பட்டிருப்பு -டேமியன் கல்குடா -டெனி மட்.மே -மைலாசன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.