மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து போக்குவரத்து தடை

மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து போக்குவரத்து தடை 


(புருசோத்)

மட்டகளப்பு கல்முனை பிரதான வீதியில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டது. 

கல்முனையில் இருந்து பெரிய கல்லாறு சென்ற டிப்பர் ரக வாகனம் மீது மற்றும் முச்சக்கர வண்டி மீதும் பெரிய நிலாவனை பிரதான வீதியில் இருந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் முறிந்து விழுந்துள்ளது இதில் அதிஷ்டவசமாக எந்த உயிர் இளப்பும் ஏற்படவில்லை சீர் அற்ற காலநிலை காரணமாக கடும் காற்று மற்றும் மழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.        

இதன் போது பிரதான வீதிதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டு இருந்தது இதன் போது விசேட அதிரடி படையினர் மற்றும் கல்முனை பொலிசாரின் தலையிட்டினால் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.